தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிராமத்திற்குள் புகுந்த 2 யானையால் அச்சம்

கிராமத்திற்குள் புகுந்த 2 யானையால் அச்சம்

கிராமத்திற்குள் புகுந்த 2 யானையால் அச்சம்


ADDED : ஆக 03, 2026 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்-கோட்டை வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்-ளன. இரவில் வெளியேறும் யானைகள், அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், காலை நேரங்களில் கிராமங்களுக்குள் புகுந்து, நீண்ட நேரம் சுற்றித்திரிவது வாடிக்கையாக உள்ளது.

அதேபோல், தேன்கனிக்கோட்டை அடுத்த தாவரக்கரை கிராமத்-திற்குள் நேற்று காலை இரு யானைகள் நுழைந்தன. அவை கிரா-மத்திலுள்ள சாலைகளிலும், குடியிருப்பு பகுதியிலும் நீண்ட நேர-மாக சுற்றித்திரிந்தன. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சிய-டைந்து, வீடுகளில் தஞ்சமடைந்தனர். இளைஞர்கள் சிலர், யானைகளுக்கு முன்பாக ஓடிச்சென்று, ஆபத்தை உணராமல், தங்-களது மொபைல்போன்களில், யானைகளை வீடியோ எடுத்தனர்.யானைகள் கிராமங்களை நோக்கி படையெடுப்பது, அதிகரித்-துள்ள நிலையில், வனத்துறையினர், வேட்டை தடுப்புக்காவ-லர்கள் கொண்ட குழுவினர், கர்நாடகா மாநிலத்திற்கு யானை-களை விரட்ட, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us