/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாட்டுத்துப்பாக்கி பதுக்கல் விவசாயிகள் இருவர் கைது
/
நாட்டுத்துப்பாக்கி பதுக்கல் விவசாயிகள் இருவர் கைது
நாட்டுத்துப்பாக்கி பதுக்கல் விவசாயிகள் இருவர் கைது
நாட்டுத்துப்பாக்கி பதுக்கல் விவசாயிகள் இருவர் கைது
ADDED : நவ 26, 2025 02:09 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசாருக்கு, ஒசஹள்ளி பகுதியில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது. அக்கிராமத்திற்கு சென்ற போலீசார், சந்தேகத்தின் பேரில் விவசாயி மாதேஷ், 47, என்பவரின் வீட்டிற்கு பின்னால் சோதனை செய்தனர்.
அங்கு, உரிமம் இல்லாத இரு நாட்டுத்துப்பாக்கிகள் இருந்தன. அவற்றை, வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்துவது தெரிந்தது. இதனால், மாதேஷ் மற்றும் ஏணிபெண்டா பகுதியை சேர்ந்த அவரது நண்பரான விவசாயி பச்சையப்பன், 40, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.