ADDED : நவ 04, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:பர்கூர்
எஸ்.ஐ., அமர்நாத் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பண்ட சீமனுார் அருகே
ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியிலுள்ள தென்னந்தோப்பில்
சிலர் சூதாடியது தெரிந்தது. அவர்களில் இருவரை, போலீசார் சுற்றி
வளைத்தனர்.
மற்றவர்கள் தப்பி ஓடினர். விசாரணையில் அவர்கள்,
பண்டசீமனுார் விக்னேஷ், 34, வேலுார் மாவட்டம், குடியாத்தம் பெரியார்
நகர் கிஷோர், 32, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 3
டூவீலர்களை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
