ADDED : அக் 30, 2026 01:58 AM
அ நிறம் | அளவு
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் பிரவீண்குமார், 17. கடந்த, 21ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது பெற்றோர், நேற்று முன்தினம் அளித்த புகார் படி குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பாப்பிநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் லட்சுமி, 40,
சற்று மனநலம் பாதித்தவர். கர்நாடக மாநிலம் பெங்களூரு, நிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த, 22ல் சிகிச்சைக்கு சென்று விட்டு, தன் தாயுடன் ஊருக்கு திரும்பியுள்ளார். ஓசூர் பஸ் ஸ்டாண்டில் பஸ்சில் இருந்து இறங்கியவர் திடீரென மாயமானார். இது குறித்து அவர் தாய் அளித்த புகார்படி ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
