/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு இடங்களில் கார்கள் மோதி இருவர் பலி
/
வெவ்வேறு இடங்களில் கார்கள் மோதி இருவர் பலி
ADDED : ஜன 06, 2025 02:17 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி அருகே உள்ள நடுசா-லையை சேர்ந்தவர் வெங்கடாசலபதி, 44. தொழிலாளி. இவர் கடந்த, 3 மாலை, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பையனப்பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழி-யாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடாசலபதி சம்பவ இடத்திலேயே இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊத்தங்கரை தாலுகா நாரலப்பள்ளியை சேர்ந்தவர் குமார், 45. மாங்காய் வியாபாரி. இவர் கடந்த, 4ம் தேதி இரவு, கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை சாலை சாமல்பட்டி ராமச்சந்திரா திருமண மண்-டபம் அருகே ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில் சென்று கொண்-டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதி-யதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.