/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இருதரப்பினர் தகராறு 5 பேருக்கு காப்பு
/
இருதரப்பினர் தகராறு 5 பேருக்கு காப்பு
ADDED : செப் 05, 2025 01:22 AM
தளி, தளி அருகே பேலாளம் பகுதியை சேர்ந்தவர் கரியப்பா, 65, விவசாயி; இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த முனியப்பா, 42, என்பவரது மகளும், உனிசேநத்தம் பகுதியை சேர்ந்த ரூபேஷ் என்பவரும், கடந்த ஒரு மாதத்திற்கு முன், வீட்டிலிருந்து வெளியேறினர்.
இதற்கு, கரியப்பா ஆதரவு அளித்ததாக முனியப்பா சந்தேகமடைந்தார்.
அது தொடர்பாக கடந்த மாதம், 28ம் தேதி, கரியப்பாவிடம் கேள்வி எழுப்பினார். அதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த முனியப்பா, மரக்கட்டையால் கரியப்பாவை தாக்கினார். இதில் தலையில் காயமடைந்த அவர், தளி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார், முனியப்பாவை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர். அதேபோல், தன்னை தாக்கியதாக முனியப்பா கொடுத்த புகார்படி, கரியப்பா, 65, அவரது மனைவி மல்லம்மா, 58, மகன்கள் முனிராஜ், 30, பாப்பையா, 28, ஆகிய, 4 பேரை போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.