/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு சாலை விபத்து வாலிபர் உட்பட இருவர் பலி
/
வெவ்வேறு சாலை விபத்து வாலிபர் உட்பட இருவர் பலி
ADDED : ஜூன் 01, 2025 01:15 AM
கிருஷ்ணகிரி,
பர்கூர் தாலுகா, எம்.ஜி.ஹள்ளியை சேர்ந்தவர் தம்பிதுரை, 20. இவர், நேற்று முன்தினம், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். காலை, 11:00 மணியளவில் வேட்டியம்பட்டி அருகே திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலை வேட்டியம்பட்டி அருகே ஆலமரத்து கொட்டாய் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் இறந்தார். விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
குருபரப்பள்ளி அடுத்த கங்கசந்திரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 33, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 29 இரவு பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றார்.
இரவு, 8:30 மணியளவில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் கிருஷ்ணகிரி - சேலம் சாலை ராயக்கோட்டை மேம்பாலம் அருகே, அங்கு நின்ற லாரி மீது மோதியதில் கோவிந்தராஜ் இறந்தார். விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.