ADDED : நவ 09, 2026 01:07 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர், 14 வயது சிறுவன்; ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த, 4ம் தேதி காலை, 8:45 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவன் திரும்பி வரவில்லை. அவரது தாய் புகார்படி, ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., தமிழ்மணி வழக்குப்பதிந்து தேடி வருகிறார்.ஓசூர் கே.சி.சி., நகரை சேர்ந்தவர் அரவிந்த் மனைவி கவினயா, 24. ஓசூர் தனலட்சுமி வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கவினயா கடந்த, 4ம் தேதி காலை, 8:45 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியேறி மாயமானார். கணவர் அரவிந்த் புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.
