/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் வருஷாபிஷேகம்
/
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் வருஷாபிஷேகம்
ADDED : பிப் 04, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், வருஷாபிஷேக விழா மற்றும் ரத சப்தமி விழா நேற்று துவங்கி-யது. வருஷாபிஷேக விழாவையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு, கோ பூஜை, கலச ஸ்தாபனம், ஹோமங்கள் ஆகியவை நடந்தன. காலை, 9:30 மணிக்கு, பூர்ணாஹூதி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.
பின்னர், லட்சுமி நரசிம்ம சுவாமி உற்சவர், வாகனத்தில் அமர்ந்து கோவிலுக்குள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (பிப்.4) ரத சப்தமி விழாவையொட்டி, சுவாமி நகர் வலம் நடக்க உள்ளது.