/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தில் ரசாயன நுரை குறைந்ததால் வாகன போக்குவரத்து துவக்கம்
/
தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தில் ரசாயன நுரை குறைந்ததால் வாகன போக்குவரத்து துவக்கம்
தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தில் ரசாயன நுரை குறைந்ததால் வாகன போக்குவரத்து துவக்கம்
தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தில் ரசாயன நுரை குறைந்ததால் வாகன போக்குவரத்து துவக்கம்
ADDED : மே 21, 2025 01:25 AM
ஓசூர், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் மாலை வரை, 904.49 கன அடி நீர்வரத்து இருந்தது. அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, 2,200 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து, அந்த நீர் முழுவதும் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டது. அதனால், அணை எதிரே உள்ள தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தை தொட்டவாறு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும், ரசாயன நுரை பாலத்தை சூழ்ந்ததால், இருபுற சாலையிலும், வாகன போக்குவரத்தை வருவாய்த்துறையினர் நிறுத்தி, தடுப்பு அமைத்தனர்.
நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 1,101 கன அடியாக குறைந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 1,361 கன அடி, வலது, இடது கால்வாயில், 88 கன அடி என மொத்தம், 1,449 கன அடி நீர் திறக்கப்பட்டது.
தட்டகானப்பள்ளி தரைபாலத்தின் மீது தேங்கியிருந்த ரசாயன நுரை குறைந்ததால், நேற்று காலை அவ்வழியாக வாகன போக்குவரத்து துவங்கியது. நேற்று தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், 6வது நாளாக நேற்றும் ரசாயன நுரை அதிகளவில் பெருக்கெடுத்தது. தட்டகானப்பள்ளி, சித்தனப்பள்ளி, நந்திமங்கலம், பெருமாண்டப்பள்ளி, தேவிசெட்டிப்பள்ளி, முகுலப்பள்ளிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தின் வழியாக வழக்கம் போல் சென்றனர். பாலத்தின் மீது சேறும், சகதியுமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறினர்.