ADDED : ஆக 26, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூரில், தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. ஓசூர் மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமிரெட்டி தலைமையில், பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம், ஓசூர் தர்கா அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
கோவில் அருகே வைத்திருந்த விஜயகாந்த் உருவ படத்திற்கு, கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செயற்குழு உறுப்பினர் மணி, அவைத்தலைவர் சரவணன், பொருளாளர் அறிவழகன், செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், துணை செயலாளர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.