/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊத்தங்கரை பி.டி.ஓ., ஆபீசை முற்றுகையிட்ட கிராம மக்கள்
/
ஊத்தங்கரை பி.டி.ஓ., ஆபீசை முற்றுகையிட்ட கிராம மக்கள்
ஊத்தங்கரை பி.டி.ஓ., ஆபீசை முற்றுகையிட்ட கிராம மக்கள்
ஊத்தங்கரை பி.டி.ஓ., ஆபீசை முற்றுகையிட்ட கிராம மக்கள்
ADDED : நவ 05, 2024 01:15 AM
ஊத்தங்கரை, நவ. 5-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, கொல்லப்பட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்லப்பட்டியில், 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தாழ்வான பகுதியாக உள்ளதால், இப்பகுதியில் கனமழையின்போது, குடியிருப்புக்களில் மழை நீர் புகுந்து மக்கள் பாதிக்கப் படுகின்றனர். மழை நீரை வெளியேற்ற கால்வாய் அமைக்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, ஊத்தங்கரை போலீசார் மற்றும் பி.டி.ஓ., சமாதானப்
படுத்தினர்.
பி.டி.ஓ., பாலாஜி சம்பவ இடம் சென்று, தேங்கியுள்ள மழை நீரை அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டார். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.