/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடி தண்ணீருக்கு அலையும் மடத்தானுார் கிராம மக்கள்
/
குடி தண்ணீருக்கு அலையும் மடத்தானுார் கிராம மக்கள்
ADDED : ஆக 01, 2025 01:19 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, மடத்தானுார் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. அப்பகுதியில் கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன்பு, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி, குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த ஒரு வருடமாக, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றாமல், நீர்த்தேக்க தொட்டி வெறுமனே காட்சி அளித்து வருகிறது.
இப்பகுதியிலுள்ள சின்டெக்ஸ் தொட்டிக்கு, அதே பகுதியில் உள்ள போர்வெல் மூலம் தண்ணீர் ஏற்றி, வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீரும் அப்பகுதியிலுள்ள மக்கள் அனைவருக்கும் கிடைக்காமல், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் காலை நேரத்தில், பெண்கள் குடி தண்ணீருக்கு காலிக்குடங்களுடன், அருகில் விவசாய கிணறுகளுக்கு சென்று உயிரை பணயம் வைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக குடிநீர் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.