/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஆக 09, 2025 01:49 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரம், 3 நாட்கள் பரவலாக மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 486 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, 5ல் கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து, 369 கன அடியாக இருந்த நிலையில் நேற்று, 538 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து பாசனக் கால்வாய் மற்றும் தென்பெண்பெண்ணை ஆற்றில் என மொத்தம், 593 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 47.85 அடியாக நீர்மட்டம் இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பெனுகொண்டாபுரத்தில், 5.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

