ADDED : அக் 26, 2026 01:55 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் பெய்த மழையால், விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. பர்கூரில் இருந்து வேலுார் செல்லும் சாலையில், அண்ணாநகர் அருகே சர்வீஸ் சாலையில், 3 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் சர்வீஸ் சாலையை கடந்து செல்ல கிராம மக்களும், திருப்பத்துார், நாட்ரம்பள்ளி, வேலுார் செல்லும் புறநகர் பஸ்களும், கனரக வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சின்ன பர்கூர் பகுதியில் உள்ள கோரல சின்னப்ப செட்டி குடியிருப்பு பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
