/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதன்கிழமை படுகொலைகள்; ஓசூர் பகுதி போலீசார் அதிர்ச்சி
/
புதன்கிழமை படுகொலைகள்; ஓசூர் பகுதி போலீசார் அதிர்ச்சி
புதன்கிழமை படுகொலைகள்; ஓசூர் பகுதி போலீசார் அதிர்ச்சி
புதன்கிழமை படுகொலைகள்; ஓசூர் பகுதி போலீசார் அதிர்ச்சி
ADDED : மார் 21, 2025 11:49 PM
ஓசூர்; ஓசூர் உட்கோட்டத்தில், அடுத்தடுத்து புதன்கிழமைகளில் படுகொலைகள் நடந்து வரும் நிலையில், ஹட்கோ, பாகலுார் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை கூட நிரப்பாமல், அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டத்தில் சூளகிரி, ஓசூர் டவுன், சிப்காட், பேரிகை, மத்திகிரி, பாகலுார், ஹட்கோ, நல்லுார் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
தமிழக எல்லையில் அமைந்துள்ளதால், ஆண்டுக்கு சராசரியாக, 30க்கும் மேற்பட்ட கொலைகள் நடக்கின்றன. கர்நாடகாவில் கொலை செய்யப்படும் நபர்களின் சடலங்கள், ஓசூர் உட்கோட்டத்திற்குள் வீசிச் செல்லப்படுவதும் உண்டு.
ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் 12ல், லுார்துசாமி, 70, மற்றும் அவரது மனைவியின் தங்கை எலிசபெத், 60, ஆகியோர்; 19ல், சூளகிரி அருகே அட்டகுறுக்கியில், நாகம்மா என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டனர்.
இரு கொலைகளையும் ஒரே கும்பல், அடுத்தடுத்த புதன்கிழமைகளில் செய்திருக்க வேண்டும் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
வரும் 26 புதன்கிழமை அன்று மீண்டும் கொலை நடந்து விடக்கூடாது என நினைத்து, 100க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியையும், கொலை கும்பல் குறித்தும் விசாரிக்கின்றனர்.
ஏற்கனவே, ஓசூர் உட்கோட்டத்தில் போலீசார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், கொலை வழக்கு விசாரணைக்கு போலீசார் பெரிய அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், மற்ற வழக்கமான பணிகளை போலீசாரால் செய்ய முடியவில்லை.
சட்டசபை நடக்கும் நேரத்தில், ஓசூர் பகுதியில் கொலைகள் நடக்கின்றன. நேற்றும், சூளகிரி அருகே பெரிய பள்ளம் கிராமத்தில், ரமேஷ், 48, என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஓசூர் உட்கோட்டத்தில், கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.