/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 4 பேருக்கு நலத்திட்ட உதவி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 4 பேருக்கு நலத்திட்ட உதவி
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 4 பேருக்கு நலத்திட்ட உதவி
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 4 பேருக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஆக 21, 2025 01:47 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், 4 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ., வழங்கினர்.
கிருஷ்ணகிரி டி.பி., சாலையில் வார்டு எண் 3, 4, 6 பகுதிகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. அப்பணிகளை கலெக்டர் தினேஷ்குமார், திமுக., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வரும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் அளிக்கப்படும் மனுக்களின் மீது, 45 நாட்களில் தீர்வு காணப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்று நடந்த முகாம்களிலும், 400க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்,” என்றார்.
தொடர்ந்து, மனு அளித்தவர்களில், முதல்வர் மருத்துவ காப்பீட்டு அட்டை, ரேஷன் அட்டை பெயர் மாற்றத்திற்கான ஆணை, மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணை, சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான ஆணை என மொத்தம், 4 பேருக்கு ஆணைகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதாநவாப்,
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, தாசில்தார் சின்னசாமி, மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.