/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கருணாநிதி பிறந்த நாளில் 1,500 பேருக்கு நல உதவிகள்
/
கருணாநிதி பிறந்த நாளில் 1,500 பேருக்கு நல உதவிகள்
ADDED : ஜூன் 02, 2025 03:31 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.,
வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, கிருஷ்ண-கிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதி-யழகன் எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார். கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலுள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்படுகிறது.தொடர்ந்து இனிப்பு வழங்கி 1,500 பேருக்கு நலஉதவிகள் வழங்-கப்படுகிறது. இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இதே போல், நிர்வாகிகள் அவர்கள் சார்ந்த பகுதிகளில் கட்சி கொடியேற்றி, முன்னாள் முதல் அமைச்சர் கருணா
நிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும். மேலும், நல உதவிகள் வழங்கியும், மாணவ, மாணவியக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கியும்
கொண்டாட வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.