/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவி
/
கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவி
கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவி
கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஜூன் 04, 2025 01:14 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு, கிழக்கு நகர, தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி தலைமை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி, பிரசார குழு உறுப்பினர் மாலதி நாராயணசாமி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தவர். அவர் தந்து சென்ற திட்டங்களை இன்றும் பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் தொழிற்சாலைகளை வளர்க்க சிப்காட், ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன், ப்ளூரைடு தண்ணீர் இல்லாத கூட்டு குடிநீர் வழங்கி தாகம் தணித்த அமுதசுரபி கருணாநிதி. 24 மணிநேரமும் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் உழைத்து, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கி தந்தவர். அவரது பிறந்தநாளில், வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில், 200 தொகுதிகளை வென்று, அவரது அடுத்த பிறந்தநாளில் கொண்டாட சபதம் ஏற்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.