/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரயில்கள் மோதி தீ பயணிகள் கதி என்ன?
/
ரயில்கள் மோதி தீ பயணிகள் கதி என்ன?
ADDED : அக் 12, 2024 01:21 AM
ரயில்கள் மோதி தீ
பயணிகள் கதி என்ன?
சென்னை, அக். 12-
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, நேற்று காலை, 10:34 மணிக்கு மைசூரு - தர்பங்கா என்ற பக்மதி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை அருகே, இரவு, 9:25 மணிக்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதில் சில ரயில் பெட்டிகளில் தீப்பிடித்து எரிய தொடங்கின. பயணிகள் அலறி துடித்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் மீட்பு பணிக்கு விரைந்தனர். இந்த ரயில்கள் விபத்துக்குள்ளானதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு மீட்பு பணிக்கு உதவினர். அவர்கள், ரயில் பெட்டிகளில் காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். தெற்கு ரயில்வே அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.