sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரோஜா நகரான ஓசூரில் மலர் கண்காட்சி நடக்குமா?

/

ரோஜா நகரான ஓசூரில் மலர் கண்காட்சி நடக்குமா?

ரோஜா நகரான ஓசூரில் மலர் கண்காட்சி நடக்குமா?

ரோஜா நகரான ஓசூரில் மலர் கண்காட்சி நடக்குமா?


ADDED : ஜூலை 26, 2025 08:36 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 08:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:ரோஜா நகரான ஓசூரில், மலர் கண்காட்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, பல ஆண்டுகளாக தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூரில் பசுமை குடில்கள் அமைத்து, 3,000 ஏக்கரில் கொய்மலர்கள் சாகுபடி நடக்கிறது. குறிப்பாக, ரோஜா வகையான தாஜ்மகால், பர்ஸ்ட் ரெட், அவலாஞ்சி, நோப்லஸ், கார்வெட், கோல்ட் ஸ்டிரைக் உட்பட, 16 வகை ரோஜாக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இது தவிர, ஜெர்புரா மலர்களான ஸ்டேன்சா, பேலன்ஸ், எஸ்மாரா, கோலியாத், கோல்ட் ஸ்டிரைக் போன்ற வகைகளும், கார்னேசன் வகைகளான டர்போ, மாஸ்டர், எரக்டஸ், கூல், டோணா, பிக்மாமா, மஞ்சள் டோணா, லிபர்டி வகைகளும், செவ்வந்தி ரகங்களான லெக்சி ரெட் , ஆர்க்டிக் குயின், பினா குலாடா, கான்டோர் பிங்க், ஜாம்பைன் ஆரஞ்சு, ஜாம்பைன் கோல்டன், ஜாம்பைன் மஞ்சள், பீலிங், கிரீன் டார்க் போன்றவற்றை, ஓசூர் பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் , நாசிக், புனே பகுதிகளுக்கு அடுத்தப்படியாக ஓசூரில் தான், அதிகளவில் கொய்மலர்கள் சாகுபடி நடக்கிறது.

ஆனால், தமிழகத்தின் எல்லையில் ஓசூர் நகரம் உள்ளதால், அரசின் கவனம் இப்பகுதி மேல் விழுவதில்லை.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, சென்னை போன்ற பகுதிகளில் மலர் கண்காட்சிகளை நடத்தும் தமிழக அரசு, ஓசூரை கண்டுகொள்வதில்லை.

கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படும் நிலையில், ஓசூரில் மலர் கண்காட்சியை நடத்த முன் வருவதில்லை.

தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குநர் பாலசிவபிரசாத் கூறியதாவது:

மலர் கண்காட்சி நடத்தினால், ஓசூரில் எந்தெந்த மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது என்பதை காட்சிப்படுத்த முடியும்.

அதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக மலர்களை கொள்முதல் செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

கொய்மலர் உற்பத்தியில் முதலீடுகள் ஈர்க்கப்படும். விவசாயிகள் நவீன தொழில்நுட்பம் குறித்து நேரடியாக அறிந்துகொள்ள முடியும்.

தற்போதைய புதிய ரக மலர்களை அறிந்து, அவற்றை சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும். 40,000 ஹெக்டேருக்கு மேல் திறந்த வெளியில் சாமந்தி, பட்டன் ரோஜா உட்பட பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 3,000 நர்சரி பண்ணைகள், 5,000 ஏக்கரில் அலங்காரத்திற்கு தேவையான செடிகள் சாகுபடியாகின்றன.

ஓசூரில் சாகுபடி செய்யப்படும் மலர்களுடன் ஒப்பிடும் போது, ஊட்டி, கொடைக்கானலில், 10 சதவீதம் மட்டுமே மலர் சாகுபடி நடக்கிறது.

அங்கு மலர் கண்காட்சியை நடத்தும் அரசு, ஓசூர் பக்கம் கவனத்தை செலுத்தாமல் உள்ளது. மலர் கண்காட்சி நடத்தினால், பிளாஸ்டிக் மலர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மக்களிடம் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

மஹாராஷ்டிரா மாநில அரசு, பிளாஸ்டிக் மலர்களை தடை செய்துள்ளது. ஆனால், தமிழக அரசு தடை செய்யாமல் உள்ளதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us