/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'குடிநீர் பிரச்னையை கண்டுக்கல' கலெக்டர் ஆபீசை பெண்கள் முற்றுகை
/
'குடிநீர் பிரச்னையை கண்டுக்கல' கலெக்டர் ஆபீசை பெண்கள் முற்றுகை
'குடிநீர் பிரச்னையை கண்டுக்கல' கலெக்டர் ஆபீசை பெண்கள் முற்றுகை
'குடிநீர் பிரச்னையை கண்டுக்கல' கலெக்டர் ஆபீசை பெண்கள் முற்றுகை
ADDED : பிப் 04, 2025 05:44 AM
கிருஷ்ணகிரி: சின்னமணவாரனப்பள்ளி பஞ்., பெண்கள், 20க்கும் மேற்-பட்டோர் நேற்று, காலிக்குடங்களுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 'கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே சின்ன மணவாரனப்பள்ளி பஞ்., ஜிங்-களூர், சலாம் நகரில், 35 குடும்பங்களை சேர்ந்த, 200க்கும் மேற்-பட்டோர் வசிக்கிறோம். அங்கு கடும்
குடிநீர் தட்டுப்பாடு உள்-ளது. இங்கு கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை நீர்தேக்-கத்தொட்டி மூலம்
பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கினர். ஆனால் சில வாரங்களிலேயே அங்கு சாக்கடை கால்வாய் கட்ட
பொக்லைன் மூலம் குழி தோண்டினர். அதன்பின் குடிநீர் வர-வில்லை. சாக்கடை கால்வாயும் கட்டவில்லை.
குடிநீர், மற்ற பகு-திகள் அனைத்திற்கும் செல்லும் நிலையில், எங்கள் பகுதிக்கு மட்டும் வரவில்லை. ஜல்ஜீவன்
திட்டத்திலும், பைப் லைன் அமைத்து தரவில்லை. நாங்கள், குடிநீருக்கு ஒரு கி.மீ., துாரம் வரை சென்று
கிணற்றிலோ அல்லது மேல்நிலை நீர்தேக்கத்-தொட்டி அருகிலுள்ள பைப்பிலோ தண்ணீர் பிடித்து வருகிறோம்.
கூலித்தொழிலாளிகளான நாங்கள் வருமானத்தின் பெரும்பகு-தியை கொடுத்து, டிராக்டரில் குடிநீர் வாங்கி
வருகிறோம்' என்-றனர்.இதைதொடர்ந்து, குடிநீர், சாக்கடை கால்வாய் கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து சென்றனர்.

