/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி பெண்கள் முற்றுகை
/
குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி பெண்கள் முற்றுகை
ADDED : அக் 18, 2024 02:56 AM

ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பெரியபாப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் பகுதியின் குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி, நேற்று சூளகிரி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, அவர்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் கடந்த ஆறு மாதமாக, குடிநீர் பிரச்னை உள்ளது. ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுக்கும் மின் மோட்டார் அடிக்கடி பழுதால், கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர். அவர்களை, அதிகாரிகள் சமாதானப்படுத்தி, 'விரைவில், புது மின் மோட்டார் பொருத்தி, குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்' என, உறுதி அளித்தனர்.