/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் ரூ.98.96 லட்சத்தில் பணி துவக்கம்
/
பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் ரூ.98.96 லட்சத்தில் பணி துவக்கம்
பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் ரூ.98.96 லட்சத்தில் பணி துவக்கம்
பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் ரூ.98.96 லட்சத்தில் பணி துவக்கம்
ADDED : அக் 16, 2025 01:06 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் கங்கலேரி பஞ்., மாதேப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 235 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும், 15 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளிக்கு வகுப்பறை பற்றாக்குறை உள்ளதாக, கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம், கூடுதல் வகுப்பறை கேட்டு, ஆசிரியர்கள் மனு அளித்திருந்தனர். அதன்படி, பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டு திட்டத்தில், 98.96 லட்சம் ரூபாய் நிதியில், கூடுதலாக, 4 வகுப்பறைகள் கட்டப்படுகிறது. இதற்கான பணியை, அ.தி.மு.க., - எ
ம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சென்னப்பன், ஒன்றிய செயலாளர் சூர்யா, மகளிரணி தலைவி சுகந்தி மாது, முன்னாள் கவுன்சிலர் அருணாசலம், ஜெயராமன், பி.டி.ஏ., தலைவர் பழனி, இணை செயலாளர்கள் கோவிந்தராஜ், பச்சியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.