/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீடு புகுந்து திருடிய தொழிலாளி கைது
/
வீடு புகுந்து திருடிய தொழிலாளி கைது
ADDED : ஏப் 06, 2024 01:59 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே டி.ஜி.,தொட்டியை சேர்ந்தவர்
ராமசாமி, 28.
கடந்த, 2 ல் வீட்டை பூட்டி விட்டு, சொந்த ஊரான அரசச்சூர்
கிராமத்திற்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று
பார்த்த போது, பீரோவில் இருந்த ஆறரை பவுன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி
பொருட்கள் திருட்டு போயிருந்தது. ராமசாமி கொடுத்த புகார்படி,
தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில்,
டி.ஜி.,தொட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ், 40, என்பவர்
திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார்,
நகையை பறிமுதல் செய்தனர்.

