/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தொழிலாளி
/
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தொழிலாளி
ADDED : நவ 05, 2024 01:21 AM
மின்சாரம் தாக்கி உயிருக்கு
போராடிய தொழிலாளி
ஓசூர், நவ. 5-
கெலமங்கலம் கணேஷா காலனியை சேர்ந்தவர் பிரேம்குமார், 40. இவர் நேற்று மாலை, 6:00 மணிக்கு, அப்பகுதியிலுள்ள சாய்பாபா கோவில் எதிரே, சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோலார் பேனல் பொருத்த மாடிக்கு சென்றார். அப்போது கால்தவறி வீட்டை ஒட்டி சென்ற உயர்மின் அழுத்த மின் கம்பி மீது விழுந்தார். அவரது கழுத்து மற்றும் இடுப்பு பகுதி மின் கம்பி சிக்கி தீப்பிடித்தது. உயிருக்கு போராடி துடி துடித்த நிலையில், அங்கிருந்த வாலிபர் ஒருவர், மர ஏணி மூலம் அவரை மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டார். 60 சதவீதம் வரை படுகாயமடைந்த பிரேம்குமார், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.