தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வி.ஏ.ஓ.,வை தாக்கிய தொழிலாளி கைது

வி.ஏ.ஓ.,வை தாக்கிய தொழிலாளி கைது

வி.ஏ.ஓ.,வை தாக்கிய தொழிலாளி கைது


ADDED : ஜூலை 18, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை; வி.ஏ.ஓ.,வை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே பி.பி.பாளையத்தில் வசிப்பவர் அம்ப்ரிஷ், 34. பாலதோட்டனப்பள்ளி வி.ஏ.ஓ.,வாக உள்ளார். அப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சீனி-வாசன், 45, மற்றும் சிலர் கடந்த மாதம் தேன்கன்-கனிக்கோட்டையில் நடந்த ஜமாபந்தியில் இல-வச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

அதன்பேரில் விசாரிக்க, நேற்று முன்தினம் வி.ஏ.ஓ., அம்ரிஷ் சென்றார். சீனிவாசன் வீட்டில் யாரும் இல்லாததால், மனு கொடுத்த மற்றவர்க-ளிடம் விசாரித்து விட்டு, அலுவலகத்திற்கு திரும்பி வந்தார்.பக்கத்து வீடுகளுக்கு வந்து வி.ஏ.ஓ., அம்ரிஷ் விசாரித்து சென்றதை அறிந்த சீனிவாசன், நேற்று மாலை வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்று தகராறு செய்தார். வி.ஏ.ஓ., சட்டையை பிடித்து இழுத்து தாக்கிய அவர், வலது கால் முட்-டியில் கடித்துள்ளார். இதில் காயமடைந்த அவர், தளி போலீசில் கொடுத்த புகார்படி, சீனிவாசனை நேற்று போலீசார் கைது

செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us