/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு
/
ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு
ADDED : ஜூலை 18, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, ஆடி மாத பிறப்பையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினர்.
இதே போல், ஜோதி விநாயகர் கோவில் தெருவிலுள்ள முத்துமாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையிலுள்ள சமயபுர மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடந்தது.