/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில் பயிற்சி மையம், சமுதாய கூடம் தி.மு.க., வேட்பாளர் கண்ணன் உறுதி
/
தொழில் பயிற்சி மையம், சமுதாய கூடம் தி.மு.க., வேட்பாளர் கண்ணன் உறுதி
தொழில் பயிற்சி மையம், சமுதாய கூடம் தி.மு.க., வேட்பாளர் கண்ணன் உறுதி
தொழில் பயிற்சி மையம், சமுதாய கூடம் தி.மு.க., வேட்பாளர் கண்ணன் உறுதி
ADDED : அக் 06, 2011 04:13 AM
மதுரை : ''மதுரை மாநகராட்சி 91வது வார்டில் மகளிர்குழுவினருக்கு தொழில்
பயிற்சி மையம், சமுதாய கூடம், பொது நூலகம் அமைக்க முழுமுயற்சி செய்வேன்,''
என தி.மு.க., வேட்பாளர் வக்கீல் ஏ.எம்.கண்ணன் உறுதி கூறினார்.
கடந்தமுறை
இவர் இதே வார்டில்(பழைய 63) வெற்றி பெற்று வேலை குழு தலைவரானார். தி.மு.க.,
வார்டு செயலாளராகவும் உள்ளார். ஏ.எம்.கண்ணன் கூறியதாவது: பெரியார்தெரு,
பராசக்தி தெரு உட்பட மேடான பகுதிகளில் குழாய் அமைத்து குடிநீர் சப்ளை
செய்யப்பட்டது. ரூ.3 லட்சத்திற்கு புதிய குடிநீர் குழாய்கள், ரூ.2 கோடியில்
கான்கிரீட் சாலை, ரூ.1.50 கோடியில் மழைநீர் வாய்க்கால்கள், ரூ.60
லட்சத்தில் ஜீவாநகர், ராமையாதெருவில் தார் ரோடுகள், ரூ.30 லட்சத்தில்
போர்வெல் மதிப்பீடு, ரூ.5 லட்சத்தில் சத்துணவு கூடம், ரூ.5 லட்சத்தில்
புதிய மின்கம்பங்கள், சோடியம் விளக்குகள் என ஐந்தாண்டுகளில் ரூ.5 கோடிக்கு
பல பணிகளை செய்தேன். வார்டிலுள்ள புறம்போக்கு நிலத்தில் விளையாட்டு
மைதானம், பொழுது போக்கு பூங்கா, மத்தியமைச்சர் அழகிரி நிதி ரூ.10
லட்சத்தில் சமுதாய கூடம், பொது நூலகம் அமைக்கப்படும். வார்டில்
தேசியமயமாக்கப்பட்ட வங்கி திறக்கப்படும். மகளிர் சுய குழுக்களுக்கு தொழில்
பயிற்சி மையம், மினி பஸ் வசதி, ஜீவாநகர் 1வது தெருபாதையை அவனியாபுரம்வரை
விரிவுப்படுத்துவது போன்றவற்றை செய்வேன், என்றார்.

