sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காண்ட்ராக்டருக்கு டெண்டர் விண்ணப்பம் : நெடுஞ்சாலை துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

/

காண்ட்ராக்டருக்கு டெண்டர் விண்ணப்பம் : நெடுஞ்சாலை துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

காண்ட்ராக்டருக்கு டெண்டர் விண்ணப்பம் : நெடுஞ்சாலை துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

காண்ட்ராக்டருக்கு டெண்டர் விண்ணப்பம் : நெடுஞ்சாலை துறைக்கு ஐகோர்ட் உத்தரவு


ADDED : ஜூலை 14, 2011 01:28 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : நெடுஞ்சாலை பணிகளுக்கான டெண்டரில் கலந்து கொள்ள விடாமல் தடுக்க மனுவை நிராகரித்ததாக காண்ட்ராக்டர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, டெண்டர் விண்ணப்பத்தை இன்று வழங்க துணை கண்காணிப்பு பொறியாளருக்கு உத்தரவிட்டது.



மதுரையை சேர்ந்த ரவிக்குமார் தாக்கல் செய்த ரிட் மனு:நெடுஞ்சாலை துறையில் பன்னிக்குண்டு-பாடீஸ்வரம் ஒரு வழி சாலை பாதையை இரு வழி பாதையாக்கும் பணிக்கு கண்காணிப்பு பொறியாளர் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டார்.

ஜூலை 12 வரை நெடுஞ்சாலை வெப்சைட்டில் விண்ணப்பங்களை பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டது. வெப்சைட்டில் விண்ணப்பங்கள் பெற முடியவில்லை. இதனால் ஜூலை முதல் தேதி, விண்ணப்பம் கோரி தேவையான கட்டணம் மற்றும் தபால் செலவுகளை இணைத்து கண்காணிப்பு பொறியாளருக்கு விண்ணப்பித்தேன்.



மனுவை ஜூலை 8ல் அவர் நிராகரித்தார். அதுகுறித்த தபால் எனக்கு ஜூலை 12ல் கிடைத்தது. டெண்டரில் நான் பங்கேற்பதை தடுக்கும் நோக்கத்தில் தபால் தாமதமாக அனுப்பப்பட்டது. இது வெளிப்படையான டெண்டர் விடும் முறைக்கு எதிரானது. டெண்டர் விண்ணப்பம் வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் என்.சதீஷ்பாபு, ''டெண்டர் ஜூலை 15ல் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு விண்ணப்பம் வழங்கி, டெண்டரில் பங்கேற்க உத்தரவிட வேண்டும்,'' என்றார். இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு சிறப்பு பிளீடர் எம்.கோவிந்தனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மாலையில் மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, துணை கண்காணிப்பு பொறியாளர் மீனாட்சிசுந்தரம் ஆஜராகி, தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்பவில்லை, என்றார். இருப்பினும், மனுதாரருக்கு இன்று டெண்டர் விண்ணப்பங்களை வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.










      Dinamalar
      Follow us