/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு திட்டங்கள் வீடு தேடி வரும் தே.மு.தி.க., வேட்பாளர் வினோத்குமார்
/
அரசு திட்டங்கள் வீடு தேடி வரும் தே.மு.தி.க., வேட்பாளர் வினோத்குமார்
அரசு திட்டங்கள் வீடு தேடி வரும் தே.மு.தி.க., வேட்பாளர் வினோத்குமார்
அரசு திட்டங்கள் வீடு தேடி வரும் தே.மு.தி.க., வேட்பாளர் வினோத்குமார்
ADDED : அக் 06, 2011 04:13 AM
மதுரை : ''மதுரை மாநகராட்சி 83வது வார்டில் அரசு நல திட்டங்கள்
பாகுபாடின்றி வீடு தேடி வரும்.
மாணவர்களுக்கு கல்விக்கடன், மகளிர் சுய
உதவிக்குழுவினர் தொழில் துவங்க வங்கிகளில் கடன் பெற்று தருவேன்,'' என,
தே.மு.தி.க., வேட்பாளர் ஆர்.வினோத்குமார் உறுதி கூறினார். அவர் கூறியதாவது:
23 வயது நிரம்பிய நான் பி.காம்., பட்டதாரி. படித்து விட்டு வேலை தேடும்
இளைய தலைமுறையினர் படும்பாட்டை உணர்ந்தவன். அரசு வேலைக்காக தேர்வு
எழுதுவோருக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். 83வது வார்டு மத்திய தொகுதிக்கு
உட்பட்டது. இத்தொகுதியின் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன் தே.மு.தி.க.,வை
சேர்ந்தவர் என்பதால் வளர்ச்சி பணிகள் மேம்படுத்தப்படும். சுகாதாரமான
குடிநீர் தடையின்றி வழங்கப்படும். கொசுத்தொல்லையை ஒழிக்கவும், கொசு
உற்பத்தியை தடுக்கவும் வழிவகை செய்யப்படும். குப்பைகள் தினசரி
அகற்றப்படும். ரேஷன் பொருட்கள் தரமாகவும், எடை குறைவின்றியும் வழங்க
நடவடிக்கை எடுப்பேன். மாணவர்களுக்கு கல்விக்கடன், மகளிர் சுய
உதவிக்குழுவினர் தொழில் துவங்க வங்கிகளில் கடன் பெற்று தருவேன். மீனாட்சி
அம்மன் கோயிலின் மேற்கு பகுதியில் பக்தர்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்படும். 960 071 7222 என்ற மொபைலில்
தொடர்பு கொண்டால் 24 மணி நேரமும் மக்கள் சேவை செய்ய தயார், என,
உறுதியளித்தார்.

