sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நீர் ஆதாரமான மாடக்குளம் கண்மாய் தூர்வாரப்படுமா?

/

நீர் ஆதாரமான மாடக்குளம் கண்மாய் தூர்வாரப்படுமா?

நீர் ஆதாரமான மாடக்குளம் கண்மாய் தூர்வாரப்படுமா?

நீர் ஆதாரமான மாடக்குளம் கண்மாய் தூர்வாரப்படுமா?


ADDED : ஆக 30, 2011 03:20 AM

Google News

ADDED : ஆக 30, 2011 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை வைகை ஆற்றின் தென்பகுதியில் முக்கிய நீராதாரமாக விளங்கும் மாடக்குளம் கண்மாயில், ஆக்கிர மிப்புகளை அகற்றி, தூர் வாரி ஆழப்படுத்த நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இக்கண்மாய் 378 ஏக்கர் பரப்புள் ளது. 2,478 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. நகரமயமாதல் காரணமாக நிலங்களின் பரப்பு 400 ஆகி விட்டது. வைகை பாசன கால்வாய்கள் மூலம் கண்மாய்க்கு தண்ணீர் வந்தது. வைகை ஆற்றை யொட்டிய உரப்பனூர் கண்மாய் கலிங்கில் முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு உள்ளது. இக்கால்வாய் உரப்பனூரிலிருந்து செக்கானூரணி, நாக மலை புதுக்கோட்டை வழியாக மாடக்குளத்தை அடைகிறது.ஆக்கிரமிப்புகள்: கண்மாய் கால்வாய் பகுதிகள் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளன.விராட்டிபத்து தலைமடை பகுதியில் தென்னை, வாழைத்தோப்பு போட்டு சிலர் ஆக்கிரமித் துள்ளனர். இக்கண்மாய், மாடக்குளம், பழங்கா நத்தம்,எஸ்.எஸ்.காலனி,கோவலன்நகர்,எல்லீஸ்நகர்,சம்மட்டிபுரம், பொன் மேனி, அரசரடி, ஆரப்பாளையம் பகுதியின் நீராதாரமாக விளங்குகிறது. தற்போது இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 500 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. கண்மாயில் நீர் தேக்காதது இதற்கு காரணம். சுத்தமான தண்ணீர் தேங்கிய இக்கண் மாயில் அச்சம்பத்து பகுதியிலிருந்து கழிவு நீர் கலக்கிறது.கண்மாயை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரைகளை பலப்படுத்தி கற்கள் பதிக்க வேண்டும். சுற்றுலா பயணிகளை கவர, பொழுதுபோக்கு பூங்கா அமைக்கலாம். முத்துப்பட்டி கண்மாய்: ஜெய்ஹிந்துபுரம், டி.வி.எஸ்.நகர், வில்லாபுரம், கீரைத்துறை பகுதியின் நீராதாரம் முத்துப்பட்டி கண்மாய். இதன் பரப்பு 36 ஏக்கர். மாநகராட்சி கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷன், ரோடு அமைத்தது போக 25 ஏக்கர் தற் போதுள்ளது. பாசனப் பரப்பும் சுருங்கிவிட்டது. இதையும் சீரமைத்து படகுச் சவாரி விடலாம்.



நிதி கிடைக்குமா?: பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''தேசிய ஏரிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாடக்குளம், முத்துப்பட்டி கண்மாய்களை ரூ.8 கோடி ரூபாயில் சீரமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் மத்திய அரசு 70 சதவீதம், மாநில அரசு 30 சதவீதம் நிதி வழங்கும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us