ADDED : ஆக 25, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரம் போட்டோகிராபர் ஸ்டீபன் 29. இரு நாட்களுக்கு முன்பு மதுரை தோப்பூர் பகுதியில் உள்ள விசேஷ வீட்டிற்கு போட்டோ எடுக்க வந்தார். அப்பகுதி நண்பரின் ஸ்டூடியோவில் இரவு தங்கினார்.
ஆக.,23ம் தேதி விசேஷ வீட்டிற்கு டூவீலரில் எய்ம்ஸ் ரோட்டில் அதிகாலை 3:00 மணிக்கு சென்றார். அவருக்கு முன்பும், பின்பும் டூவீலர்களில் 6 பேர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள கேமரா, அலைபேசியை பறித்துக் கொண்டு தப்பினர். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

