/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
' தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை'
/
' தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை'
ADDED : ஏப் 17, 2024 04:49 AM
மதுரை : 'தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை' என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (பெப்சா) அறிவித்துள்ளது.
மதுரையில் அதன் மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: இச்சங்கத்தில் தமிழகம் முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி நர்சரி, பிரைமரி, மெட்ரிக் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் குடும்பங்கள் பணியாற்றுகின்றன. நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு 'பெப்சா' ஆதரவு அளித்துள்ளதாக நிர்வாகிகள் சிலர் வதந்தி பரப்புகின்றனர்.
ஆனால் இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. உறுப்பினர்கள் விரும்பும் கட்சிகளுக்கு ஓட்டளிக்கலாம். ஓட்டளிப்பது ஜனநாயக கடமை. அதை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

