ADDED : ஆக 27, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்டம் சின்னசெம்மேட்டுப்பட்டி ஈஸ்வரன் 36.
கூலித் தொழிலாளி. இவர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உத்தப்பநாயக்கனுார் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். மதுரை மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவபாண்டியம்மாள் ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஈஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
