ADDED : ஏப் 01, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த நெற்கதிர்களை அறுவடை செய்தபின் வைக்கோல்களை கட்டாக கட்டி விற்கும்பணியில் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இத்தாலுகாவில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் 2ம்போக இறுதிக்கட்ட அறுவடை பணி நடந்து வருகிறது. இயந்திரம் மூலம் அறுவடை செய்த வைக்கோல்களை மற்றொரு இயந்திரம் மூலம் உருளையாக கட்டப்படுகிறது. இவற்றை தீவனத்திற்காக வாங்கி செல்கின்றனர். ஒரு ஏக்கர் அளவில் வைக்கோல் ரூ.3000 முதல் ரூ.4000 வரை விற்பனையாகிறது. பரவலாக நெல் நடவு செய்து அறுவடை பணிகள் நடப்பதால் வைக்கோல் சராசரி விலைக்கே விலைபோவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

