ADDED : மே 08, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு, : சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த, 30ம் தேதி மாலை, தனியார் பஸ் புறப்பட்டது.
ஏற்காடு, வாழவந்தி ஜனார்த்தனன், 33, ஓட்டினார். அதிவேகமாக ஓட்டியதால், மலைப்பாதையின், 13வது கொண்டை ஊசி வளைவில், பஸ் விபத்தில் சிக்கி, 11வது கொண்டை ஊசி வளைவில் விழுந்தது. இதில் பயணிகள், 5 பேர் பலியாகினர். 65 பயணியர், சேலம் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயத்துடன் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் பி.பள்ளிப்பட்டி கணேசன், 62, நேற்று காலை உயிரிழந்தார்.

