sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் 6664 ரயில்வே ஊழியர்களுக்கு பயன்

/

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் 6664 ரயில்வே ஊழியர்களுக்கு பயன்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் 6664 ரயில்வே ஊழியர்களுக்கு பயன்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் 6664 ரயில்வே ஊழியர்களுக்கு பயன்


ADDED : ஆக 28, 2024 08:01 PM

Google News

ADDED : ஆக 28, 2024 08:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:''மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தால் 6664 ரயில்வே ஊழியர்கள் பயனடைவர்,'' என, மதுரையில் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் நாகேஸ்வர ராவ் கூறினார்.

அவர் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆக., 24 ல் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 01.01.2004 முதல் பணியமர்த்தப்பட்ட ரயில்வே ஊழியர்கள் உட்பட 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர். இந்த புதிய ஓய்வூதியத்திட்டம் அடுத்தாண்டு ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தில் உறுதியான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம், கருணைத்தொகை, பணவீக்க அட்டவணைக்கேற்ப ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கப்படும்.

தெற்கு ரயில்வேயில் தற்போது ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை 81,311. இதில் 689 அதிகாரிகள், 17,916 ஊழியர்கள் உட்பட மொத்தம் 18,605 பேர் பழைய ஓய்வூதியத்திட்டத்தில் உள்ளனர். மீதமுள்ள 439 ரயில்வே அதிகாரிகள், 62,267 ஊழியர்கள் உட்பட மொத்தம் 62,706 பேர் இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க தகுதி பெற்றவர்கள்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் தற்போது ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை 8295 ஆகும். இதில் 50 அதிகாரிகள், 1581 ஊழியர்கள் உட்பட மொத்தம் 1631 பேர் பழைய ஓய்வூதியத்திட்டத்தில் உள்ளனர். மீதமுள்ள 32 ரயில்வே அதிகாரிகள், 6632 ஊழியர்கள் உட்பட மொத்தம் 6664 பேர் இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க தகுதி பெற்றவர்கள்.

இத்திட்டத்தின் மூலம் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் பணி நிறைவுக்கு முந்தைய 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீத ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு அவர் பெற்ற ஓய்வு ஊதியத்தில் 60 சதவீத ஓய்வூதியம் வழங்கப்படும். பத்தாண்டுகள் சேவை செய்த ஊழியர்களுக்கு உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.10,000 வழங்கப்படும். ஓய்வு பெறும் நாளன்று உரிய கருணைத் தொகையுடன் மொத்தமாக பணப்பலன்கள் வழங்கப்படும். இது ஓய்வூதியத் தொகையை பாதிக்காது. இந்த திட்டம் ஊழியர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே வழங்கப்படும். இதில் ஊழியர்களின் பங்களிப்பு தொகை உயராது. ஆனால் அரசின் பங்களிப்பு 14 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன், முதுநிலை கோட்ட நிதி மேலாண்மை அதிகாரி இசைவாணன், முதுநிலை கோட்ட மின் பொறியாளர் மஞ்சுநாத் யாதவ், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் முகமது ஜுபைர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us