ADDED : செப் 11, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை ஒத்தக்கடை சாந்தமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஒத்தக்கடையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பழுதடைந்த ஒரு வகுப்பறை கட்டடம் 2022 ல் அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக புது கட்டடம் அமைக்கவில்லை. இட நெருக்கடியால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பள்ளிக் கல்வித்துறைக்கு மனு அனுப்பினேன். புது கட்டடம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு வழக்கறிஞர்: கட்டுமான ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
நீதிபதிகள் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அக்.15 க்கு ஒத்திவைத்தனர்.