/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவுநீர், குப்பை கொட்டும் இடமாக மாறிய அரசுப்பள்ளி
/
கழிவுநீர், குப்பை கொட்டும் இடமாக மாறிய அரசுப்பள்ளி
கழிவுநீர், குப்பை கொட்டும் இடமாக மாறிய அரசுப்பள்ளி
கழிவுநீர், குப்பை கொட்டும் இடமாக மாறிய அரசுப்பள்ளி
ADDED : ஜூலை 08, 2024 06:22 AM

சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சி 4வது வார்டு ஆலங்கொட்டாரத்தில் நுாற்றாண்டு கண்ட அரசன் சண்முகனார் அரசு பள்ளி உள்ளது. இங்கு தொல்லியல் துறை சார்பில் ரூ.5.5 கோடி மதிப்பில் புதுப்பித்தல், சுற்றுச்சுவர், கட்டட பராமரிப்பு, மேம்படுத்துதல் பணி நடந்து வருகிறது.
பழுதடைந்த கட்டடங்களுக்கு பின் மறைவாக உள்ள சேதமடைந்த சுற்று சுவர்களை அகற்றாமல் அதன் மீது கான்கிரீட் பீம் அமைத்து இரும்பு தடுப்பு கம்பிகளை பொருத்தியுள்ளனர்.
இப்பகுதி வீடுகளின் கழிவுநீர் பள்ளி சுற்றுச்சுவர் வழியாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் துளையிட்டு வெளியேற்றப்படுகிறது. கால்நடை வளர்ப்போர் கழிவுகள், குப்பையை பள்ளிக்குள் கொட்டி வருகின்றனர். மைதானத்தை மது அருந்தும் இடமாக சமூக விரோதிகள் பயன்படுத்துகின்றனர்.
முன்னாள் மாணவர்கள் ரஜினிபிரபு, கருப்பையா கூறியதாவது: பள்ளி வளாகத்திற்குள் கழிவுநீர் விடுதல், குப்பை கொட்டுவதை பேரூராட்சி, மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். சுற்றுச்சுவரை சேதப்படுத்தி பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகளை கட்டினர். சுற்றுச்சுவரை கடந்து வரும் அப்பகுதி வீடுகளின் ஆஷ்பெட்டாஸ், ஓடுகளை அகற்றி சுவரை உயர்த்தி கட்டவில்லை. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.