தெருநாய் தொல்லை
மதுரை வண்டியூரில் காமராஜர் 1வது, 2வது தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் செல்வோர், குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -ஆனந்த ராஜா, வண்டியூர்
கழிவுநீர் தேக்கம்
மதுரை எஸ்.எஸ். காலனியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி முன் பாதாள சாக்கடை நிரம்பி ரோட்டில் ஆறாக பெருக்கெடுத்துள்ளது. பள்ளி முன் கழிவுநீர் தேங்கியுள்ளதால் கடந்து செல்ல மாணவர்கள் சிரமப்படுகின்றனர். நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - -ராமகிருஷ்ணன், எல்லீஸ் நகர்
தார் ரோடு வேண்டும்
மதுரை மேலவெளி வீதியில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் ரோடு முழுவதும் சகதியாக மாறி வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மாநகராட்சி சார்பில் உடனே தார் ரோடு அமைக்க வேண்டும்.
- - -பிரேம், அவனியாபுரம்
பாதாள சாக்கடை அடைப்பு
மதுரை 37 வது வார்டு அன்புநகர் எம்.ஜி.ஆர்., தெரு கடைசி குறுக்கு சந்தில் 10 நாட்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெரு கழிவு நீரில் மூழ்கி கிடக்கிறது. குடிநீரிலும் கழிவுநீர் கலப்பதால் நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- - ரவிசங்கர், அன்புநகர்
மோசமானது பாலம்
மதுரை 47 வது வார்டு தெற்கு வாசல் ஜெயவிலாஸ் மேம்பாலத்தின் தடுப்புச் சுவர், கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -- அசோக், தெற்கு வாசல்.