/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலி பெயரில் அபாண்டம்; 21 பெண் அலுவலர்கள் புகார்
/
போலி பெயரில் அபாண்டம்; 21 பெண் அலுவலர்கள் புகார்
ADDED : ஆக 12, 2024 10:40 PM
மதுரை : 'மதுரை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை மீது, தங்கள் பெயர்களில் போலி குற்றச்சாட்டுகளை பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, 21 பெண் அலுவலர்கள் நேற்று போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தனர்.
மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்ட கோவில்களும் உள்ளன. இவர், 21 சக பெண் அலுவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவர்களின் பெயர்களில் கடிதம் வெளியானது.
இதில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில் செயல் அலுவலராக இருந்த ஜவஹருக்கு தொடர்பு இருப்பதாக, போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் செல்லத்துரை புகார் அளித்தார்.
இந்நிலையில், 21 பெண் அலுவலர்களும் நேற்று புகார் அளித்தனர். அதில், தங்கள் பெயரை தவறாக பயன்படுத்தி, இழிவுபடுத்தி போலியாக புகார் அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

