/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது செல்லுார் ராஜு காட்டம்
/
அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது செல்லுார் ராஜு காட்டம்
அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது செல்லுார் ராஜு காட்டம்
அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது செல்லுார் ராஜு காட்டம்
ADDED : ஏப் 12, 2024 05:08 AM
வாடிப்பட்டி: ''யார் வந்தாலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது. அ.தி.மு.க., அழியும் என கூறும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு 'அட்ரஸ்' இல்லாமல் போவார்,'' என மதுரை பரவையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு காட்டமாக தெரிவித்தார்.
அ.தி.மு.க., வேட்பாளர் சரவணனை ஆதரித்து அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட செல்லுார் ராஜூ பேசியதாவது:
பொய் சொல்லியே ஆட்சிக்கு வருபவர்கள் தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தான். பிரதமர் மோடி தற்போது 10 முறையாக தமிழகம் வருகிறார். ரோடு ஷோ நடத்துகிறார். பிரதமர், மத்திய அமைச்சர்கள் வந்து போனால் போதுமா. சீனி இனிக்கும் என எழுதினால் போதுமா. சீனியை வாயில் போட்டால் தான் இனிக்கும். தமிழகத்திற்கு பா.ஜ.,வினர் என்ன செய்துள்ளார்கள். எந்த திட்டத்தையும் தரவில்லை.
மத்திய ஆளுங்கட்சி என்ற திமிரில் பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். முந்தாநாள் பெய்த மழையில் முளைத்த காளான் அவர். யார் வந்தாலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது.
கடந்த சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்தும் அண்ணாமலைக்கு மக்கள் ஓட்டு போடவில்லை. அவர் வந்த பின் பா.ஜ.,வில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் சேர்ந்துள்ளனர்.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணிக்குத்தான் போட்டி. மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன், பா.ஜ., வேட்பாளர் சீனிவாசனுக்கு மக்கள் வாக்களித்தால் அது செல்லாத ஓட்டாகத்தான் போகும் என்றார்.

