/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேளாண் மாணவிகள் கிராமப்புற மதிப்பீடு
/
வேளாண் மாணவிகள் கிராமப்புற மதிப்பீடு
ADDED : மே 11, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் ஆர்த்திகா, அபிராமி, அபிஷா, அஜ்மியா, அக் ஷயா, அமுதரசி, ஆர்த்தி, ஆஷ்மி ஆகியோர் அலங்காநல்லுார் ஒன்றியத்தில் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரிய இலந்தைகுளத்தில் கிராம வரலாறு, நில அமைப்பு, விவசாயம் தொழில்முறைகள் அறிய கிராமப்புற மதிப்பீடு செய்தனர்.
இதில் வள வரைபடம், சமூக வரைபடம், தினசரி வேலை அட்டவணை, பருவ கால அட்டவணை போன்ற கருவிகள் ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களை கொண்டு மாணவிகளால் பயன்படுத்தப்பட்டது.