ADDED : ஜூலை 08, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் தியாகத் திருவுருவம் வ.உ.சிதம்பரனார் சமூக நலப்பேரவை சார்பில் அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது.
தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் மீ. ராமசுப்பிரமணியன் வரவேற்றார். மாணவர்களுக்கு சான்றிதழ், விருதுகளை மதுரை ஆதினம் வழங்கினார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், சந்திரசேகரன், கவிஞர் விஸ்வநாதன், பாலு செந்தில்குமரன், வைகை ராஜன் ஆகியோருக்கு ஆதினம் விருது வழங்கி கவுரவித்தார்.
வ.உ.சி. பேரன் சிதம்பரம், மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பதிவாளர் அழகப்பன், பத்திரிகையாளர் ப. திருமலை, சோமசுந்தரம் பங்கேற்றனர். துணைச் செயலாளர் காளீஸ்வரன் நன்றி கூறினார்.
