/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏப்.26 பிறமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு

ADDED : ஏப் 24, 2024 06:22 AM
மதுரை : லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா, அஸ்ஸாம், சத்தீஸ்கர், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உ.பி., மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஏப்.,26ல் நடக்கிறது.
நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், மதுரை மாவட்டத்தில் கடைகள், உணவு, போக்குவரத்து, தகவல், தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ., உள்ளடக்கிய வணிக நிறுவனங்கள் என தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஓட்டுரிமையுள்ள தொழிலாளர்களுக்கு ஏப்.,26ல் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு வழங்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக தொழிலாளர்கள் உதவி கமிஷனர் (அமலாக்கம்) - 94453 98761, துணை ஆய்வாளர் 99425 41411, உதவி கமிஷனர் 63813 43552 ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.