/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் வண்ண மீன் வளர்ப்பு வர்த்தக மையம்
/
மதுரையில் வண்ண மீன் வளர்ப்பு வர்த்தக மையம்
ADDED : செப் 10, 2024 05:38 AM
மதுரை: மதுரை ஆரப்பாளையம் வைகையாறு அருகே மீன்வளத்துறை சார்பில் அலங்கார வண்ணமீன்களுக்கான வர்த்தக மையம் அமைய உள்ளது.
மதுரையில் அலங்கார மீன்கள் வளர்ப்பு உற்பத்தியில் 80 பேர் ஈடுபட்டுள்ளனர். சென்னை கொளத்துாரில் அலங்கார வண்ண மீன்களுக்கான வர்த்தக மையம் உள்ளது. தற்போது மதுரையிலும் அமைக்க 1000 சதுரமீட்டர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தரைத்தளம், முதல்தளத்தில் தலா 12 கடைகள் கட்டப்பட உள்ளன. அலங்கார மீன்கள் விற்பனை, குஞ்சுகள் உற்பத்தி, மீன்களுக்கான உணவு, தொழில்நுட்பம், மீன்தொட்டி, மோட்டார் கருவிகள் அனைத்தும் ஒரே இடத்தில் விற்கும் வகையில் இம்மையம் அமைகிறது.
இதற்காக ரூ.ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் முடிந்தநிலையில் செப்.17 ல் கட்டுமான பணி துவங்குகிறது. ஆறு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்.

