/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவர்கள் நலனுக்காக ஆலோசனை கூறிய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையா திரும்ப பெற சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 16, 2024 04:58 AM
மதுரை, : 'தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆலோசனை வழங்கியதற்காக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது இயக்குநரால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும்,' என, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இத்துறையின் கீழ் 212 ஆரம்ப, 49 நடுநிலை, 31 உயர், 28 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி இடைநிலையில் 210, பட்டதாரி பிரிவில் 179, முதுகலை பிரிவில் 49 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நடப்பு கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மாற்றுவழியில் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டமைப்பு நிர்வாகிகள் விவேக், சங்கர சபாபதி, சுதாகர் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக ஜூலை 3ல் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு துறை இயக்குநர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளதற்கு கூட்டமைப்பு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் கூறியதாவது: மாணவர்கள் நலன் கருதி சங்கங்கள் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தினோம். ஆனால் அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளை மீறியதாக (17 ஆ) குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயல் அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. நிர்வாக நலன்களுக்காக குரல் கொடுக்கும் ஆசிரியர்களின் குரல் வளையை நெரிக்கும் செயல்.
கோரிக்கைகளை வைக்கவும் குறைகளை சுட்டிக்காட்டவும் தேவைகளை கேட்டுப் பெறவும் ஜனநாயக நாட்டில் சாதாரண மக்களுக்கும் சட்டம் உரிமை வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை அதிகாரியின் ஒருதலைப்பட்சமானது.
நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திருப்ப பெற முதல்வர் ஸ்டாலினுக்கு கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம் என்றனர்.