நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை எல்லீஸ் நகர் ஜூபிடர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் ராமனாதன் தலைமை வகித்தார். மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். செயல்பாடில்லாத மாநகராட்சி பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். கிருதுமால் நதியில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரையை மழைக்காலத்திற்கு முன் அப்புறப்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆக. 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரேஸ் கென்னட் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது.
நிர்வாகிகள் ஈஸ்வர பிரசாத், பூவநாதன், ராஜீ, சுரேஷ். வைத்தியநாதன், கார்மைதீன், ரவிசங்கர், கண்ணன், உஸ்மான் அலி, அம்மணி ரவி, மூத்த குடிமக்கள் சங்க மாநிலத் தலைவர் கர்ணன் பங்கேற்றனர்.

