ADDED : ஜூன் 01, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உலக புகை மற்றும் போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் விழிப்புணர்வு படவிளக்க கண்காட்சி நடந்தது.
கண்காணிப்பாளர் மதிவண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மாதவன், செவிலியர்கள் முன்னிலையில் பிரம்மகுமாரி சரஸ்வதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.